உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புகார் தெரிவிக்க வசதியாக பஸ் டிக்கெட்டில் விவரங்கள்

புகார் தெரிவிக்க வசதியாக பஸ் டிக்கெட்டில் விவரங்கள்

திருப்பூர்: அரசு போக்குவரத்து கழகம் மூலம் வழங்கும் ஆன்லைன் பரிவர்த்தனை டிக்கெட்டில் பஸ் பதிவெண், எந்த கோட்டம், எந்த மண்டலத்தை சேர்ந்த பஸ், சர்வீஸ் பஸ்ஸா, டவுன் பஸ்ஸா, எந்நாளில், எந்நேரம் பயணம், கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றுள்ளது. இதனால், பஸ் பயணத்தின் போது ஏதேனும் நெருக்கடிகள் ஏற்பட்டால் பயணிகள் எளிதில் புகார் தெரிவிக்கும் வசதி உருவாகியுள்ளது.இதுவரை அரசு போக்குவரத்து கழக பஸ்களில் வழங்கப்படும் டிக்கெட்டில் பஸ் பதிவு எண், எந்த கோட்டம், எந்த கிளை பஸ் என்ற விபரம் இடம் பெறாது. தேதி, நேரம் ஒரு சில பஸ் டிக்கெட்டுகளில் குறிப்பிடப்படும். பெரும்பாலான பஸ்களில் இருக்காது. தற்போது, 90 சதவீத அரசு பஸ்களில், டிக்கெட் வழங்கும் மெஷின் மூலம் டிக்கெட் தரப்படுகிறது. இது தவிர, ஜிபே, போன்பே உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் தரப்படுகிறது. இதனால், பயண முழுவிபரமும் தெரிந்து விடுகிறது.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'அரசு பஸ் டிரைவர், நடத்துனர் செயல்பாடு குறித்து புகார் தெரிவிக்க விரும்பினால், டிக்கெட்டை கொண்டு பயணிகள் உயரதிகாரிகளிடம் ஆதாரத்துடன் தெரிவிக்கலாம். சில நேரங்களில் பஸ்களில் ஏதேனும் பொருட்களை தவற விடும் பயணிகள், பஸ் பதிவெண் தெரியாமல் தடுமாறுவர். அது போன்ற நேரங்களில், அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய பஸ் டிக்கெட் பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி