உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தேவன் சூப்பர் கிரிட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் சாதனை இயந்திரம்

 தேவன் சூப்பர் கிரிட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் சாதனை இயந்திரம்

திருப்பூர்: உலகிலேயே வேறெங்கும் இல்லாத வகையில், பாலி காட்டன் துணிகளே ஒரே தடவையில், சாயமேற்றும் 'Suprauno' டையிங் மெஷின், திருப்பூரில், 'நிட்டெக்' கண்காட்சியில் அறிமுகமாகியுள்ளது. மும்பையை சேர்ந்த தேவன் சூப்பர் கிரிட்டிக்கல்ஸ் நிறுவனம், நிட்டெக் கண்காட்சியில், அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய டையிங் மெஷினை அறிமுகப்படுத்தியுள்ளது. 'Suprauno' என்கிற இந்த மெஷினில், பாலியெஸ்டர் மட்டுமின்றி, நைலான், அக்ரலிக், பருத்தி, விஸ்கோஸ், லினென், கம்பளி, சில்க் போன்ற பல்வேறு துணி நுால் மற்றும் அவற்றின் கலவைகளில் தயாரிக்கப்பட்ட துணி ரகங்களையும் சாயமேற்றலாம். பயன்பாட்டிலுள்ள மற்ற இயந்திரங்களில், பாலி காட்டன் துணிகளை இரண்டு முறை சாயமேற்ற வேண்டி வரும். ஆனால், தேவன் சூப்பர் கிரிட்டிக்கல்ஸின் இயந்திரத்தில், பாலி காட்டன் துணிகளை ஒரே முறையில் சாயமேற்ற முடியும் (சிங்கிள் டை). இம்மெஷினில் நீருக்கு பதிலாக, கார்பன் டை ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. உப்பு இல்லாத மற்றும் மிக குறைந்த நீரில் சாயமேற்றுதலால், சாயமேற்றுதல் மற்றும் கழிவு சுத்திகரிப்பு செலவினங்கள் மற்றும் மின் பயன்பாடு வெகுவாக குறையும். 'நிட்டெக் - 2026' கண்காட்சியில், அரங்கம் எண்: D- -20 ல் இம்மெஷின்களை பார்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு, www.suprauno.comஎன்கிற இணையதளத்திலும், 9361555532 என்கிற எண்ணில், பாண்டியராஜனை தொடர்பு கொள்ளலாம் என அதன் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ