உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுாற்றாண்டை நெருங்கும் தேவாங்கபுரம் பள்ளி

நுாற்றாண்டை நெருங்கும் தேவாங்கபுரம் பள்ளி

திருப்பூர்: நகரின் பிரதான பகுதியில் அமைந்துள்ள தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உரிய பராமரிப்பின்றி உள்ளது. மாணவர்கள் நலன் கருதி உரிய சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் மாணவர் சேர்க்கை குறைவதைத் தடுக்கவு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சி, தேவாங்கபுரம் நடுநிலைப் பள்ளி மிகவும் பழமையானது. 1928ல் துவக்கப்பட்ட இப்பள்ளி, 2028ல் நுாற்றாண்டு விழா கொண்டாட உள்ளது. பள்ளியில், 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் 270 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். 80 சென்ட் பரப்பளவில், ஓட்டு கூரை வேய்ந்த கட்டடத்தில் 12 வகுப்பறைகள் உள்ளன. இதே வளாகத்தில், 2 அங்கன்வாடி மையங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால், மாணவர்களுக்கு உரிய கழிப்பிட வசதி இல்லை. பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகளும் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. நீண்ட ஆண்டுகள் முன்னர் கட்டிய கட்டடங்கள் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. நுாற்றாண்டை நெருங்கும் இந்தப் பள்ளியின் கட்டடம் உரிய பராமரிப்பின்றி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதனால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தகைளை இப்பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டி, அருகிலுள்ள ஜெய்வாபாய், நஞ்சப்பா பள்ளிகளுக்கும், சந்திரகாவி பள்ளி, ஓடக்காடு பள்ளிகளிலும், தங்களது குழந்தைகளை சேர்த்து விடுகின்றனர். இதுபோன்ற சூழலில், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையும் உள்ளது. எனவே, மாணவர்கள் மற்றும் பள்ளியின் நலன் கருதி வளாகத்தை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை