உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வளர்ச்சி திட்ட பணிகள்; கலெக்டர் திடீர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள்; கலெக்டர் திடீர் ஆய்வு

பல்லடம்; பல்லடம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து, கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் ஊராட்சி, தொட்டம்பட்டி கிராமத்தில், 9.22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தமிழக அரசின் கனவு இல்லம், ஓடை தூர்வாரும் பணி உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் நடந்து வரும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதற்கிடையே, மாதப்பூரில், குடிநீரின் தரம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.மேலும், வேளாண்துறை சார்பில், தக்கை பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும், பொங்கலுார் கே.வி.கே., சார்பில், சணப்பை விதை உற்பத்தி திடல் மற்றும் தென்னை நாற்றங்கால்களையும் பார்வையிட்டார்.தேனீ வளர்ப்பு பயிற்சி, நாட்டுக்கோழி முட்டை குஞ்சு பொரிப்பான் கருவிகளையும் ஆய்வு செய்தார். வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி