மேலும் செய்திகள்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
08-May-2025
'உங்கள் ஊரில்' முகாம்
22-Apr-2025
திருப்பூர்; 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், நேற்று, காங்கயத்தில் தங்கிய கலெக்டர் கிறிஸ்துராஜ், பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினார்.படியூர் ஊராட்சி, வடக்குபாளையத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள முருங்கை சாகுபடி, தெற்குபாளையத்தில், நீடித்த பசுமை போர்வை இயக்கத்தில் நடப்பட்டுள்ள சந்தன மரங்கள், காங்கயம் நகராட்சி, அண்ணா நகரில் நடைபெற்றுவரும் பல்நோக்கு மையம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். வீரணம்பாளையத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், 5.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 92 வீடு பணிகள், பச்சாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வகம், உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார்.காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், பொதுமக்களின் தேவைகள் குறித்து ஆய்வு செய்து, உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
08-May-2025
22-Apr-2025