உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.5.38 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம் 

ரூ.5.38 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம் 

வெள்ளகோவில்: வெள்ளகோவில் நகராட்சி, தீத்தாம்பாளையத்தில் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், 10 லட்சம் ரூபாய் மற்றும் சிவநாதபுரத்தில் 32 லட்சம் ரூபாய் மதிப்பிலும் கான்கிரீட் சாலை, மேட்டுப்பாளையம் ஊராட்சி மோளக்கவுண்டன்வலசு பகுதியில், 1.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முத்துார் ரோடு - மோளக்கவுண்டன் வலசு வரை தார் ரோடு. எஸ்.என்.பி. நகரில், 80 லட்சம் ரூபாயில் கூடம் அமைத்தல், சுக்குட்டிபாளையத்தில், 1.36 கோடி ரூபாயில் ரோடு அமைத்தல் என மொத்தம், 5.38 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நேற்று துவங்கப்பட்டது. இப்பணிகளை அமைச்சர் சாமிநாதன் நேற்று துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை