உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரசவத்துக்கு உதவிய பெண் போலீஸ்; வெகுமதி வழங்கி டி.ஜி.பி., பாராட்டு

பிரசவத்துக்கு உதவிய பெண் போலீஸ்; வெகுமதி வழங்கி டி.ஜி.பி., பாராட்டு

திருப்பூர்; திருப்பூர், வேலம்பாளையம் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். ஒடிசாவை சேர்ந்த கர்ப்பிணி பாரதி, 25 என்பவர், கணவருடன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். பாரதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வாகன சோதனையில் இருந்த ஆயுதப்படை பெண் போலீஸ் கோகிலா, கர்ப்பிணியின் பிரசவத்துக்கு உதவினார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில், குழந்தை பிறந்தது. பெண் போலீஸ் கோகிலா, நர்சிங் பயிற்சி பெற்றவர். விரைவான மற்றும் அர்ப்பணிப்புமிக்க நடவடிக்கையை பாராட்டி, பெண் போலீஸ் கோகிலாவை சென்னை தலைமை அலுவலகத்துக்கு நேரில் அழைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ