உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சேவை துவக்கம்

அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சேவை துவக்கம்

பல்லடம்: பல்லடம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான புதிய இயந்திரங்களை, அமைச்சர் சாமிநாதன் நேற்று துவக்கி வைத்தார். பல்லடம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி செய்து தர வேண்டும் என, நோயாளிகள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில், நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதன்படி, தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில், புதிய டயாலிசிஸ் சிகிச்சை மையம், அரசு மருத்துவமனை வளாகத்திலேயே அமைக்கப்பட்டது. இந்த மையத்தில், 55 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராமசாமி வரவேற்றார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா, மருத்துவர் அருண் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். டயாலிசிஸ் மையத்தை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டன. டயாலிசிஸ் மையம் அமைக்க உறுதுணையாக இருந்த தன்னார்வலர்கள் பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ