பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி அரசுப்பள்ளிகள் சாதித்தனவா?
திருப்பூர்; பிளஸ் 2 தேர்வில், பல் லடம், அவிநாசி, காங்கயம், ஊத்துக்குளி, மடத்துக்குளம் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறித்த தொகுப்பு இதோ: பல்லடம்
கடந்த, 2023ல் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றது; 2024ல், 94 மாணவர்கள் தேர்வெழுதியதில், 89 பேர் தேர்ச்சி பெற்றனர். ஐந்து பேர் தேர்ச்சி பெறாததால், 94.68 சதவீதம் பெற்றது.இம்முறை, 113 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்; 106 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏழு பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம் 93.81. முந்தைய ஆண்டை விட, 0.87 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2023ல், 98.72 சதவீதம் பெற்றது. 2024ல் 240 மாணவியர் தேர்வெழுதி, ஐந்து பேர் மட்டும் தேர்ச்சி பெறாததால், 97.92 சதவீதம் பெற்றது. இம்முறை, 224 பேர் தேர்வெழுதியுள்ளனர்; 220 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; நால்வர் தேர்ச்சி பெறாததால், 98.21 சதவீதம் தேர்ச்சி சதவீதத்தை பெற்றுள்ளது. அவிநாசி
அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 2023ல், 93.33 சதவீத தேர்ச்சி பெற்றது. கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம், 88.89 ஆக குறைந்தது. 135 மாணவர் தேர்வெழுதியதில், 15 பேர் தேர்வாகவில்லை. நடப்பாண்டு, 111 மாணவர் தேர்வெழுதி, மூவர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 97.30. முந்தைய ஆண்டை விட, 8.41 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது.அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 2023ல், 98.33 சதவீத தேர்ச்சி பெற்றது. 2024ல், 204 மாணவியர் தேர்வெழுத, நான்கு பேர் தேர்ச்சி பெறவில்லை; தேர்ச்சி சதவீதம், 98.04. நடப்பாண்டு, 181 மாணவியர் தேர்வெழுதி, 181 பேரும் தேர்ச்சி பெற்றதால், நுாறு சதவீத தேர்ச்சி பெற்று பாராட்டு பெற்றுள்ளது. காங்கயம்
காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி, 2023ல், 96.09 சதவீத தேர்ச்சி பெற்றது. 2024ல், 107 மாணவர், 52 மாணவியர் என 159 பேர் தேர்வெழுதினர். 150 பேர் தேர்ச்சி பெற்றனர்; ஒன்பது பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 94.34. நடப்பாண்டு, 87 மாணவர், 47 மாணவியர் என, 134 பேர் தேர்வெழுதினர்; ஆறு பேர் தேர்ச்சி பெறவில்லை; தேர்ச்சி சதவீதம், 1.18 உயர்ந்துள்ளது. ஊத்துக்குளி
ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 2023ல், 63.16 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது; ஆனால், 29.38 சதவீத கூடுதல் தேர்ச்சியை, 2024ல் பெற்று, 95.24 சதவீதத்தை ஒரே ஆண்டில் எட்டி பிடித்துள்ளது. நடப்பாண்டில், 94 மாணவர்கள் தேர்வெழுதி, 82 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 12 பேர் தேர்வாகவில்லை. 2023ல், 67 பேர் தேர்வெழுதி, ஐந்து பேர் தேர்வாகாவில்லை. நடப்பாண்டு, 12 பேர் தேர்ச்சி பெறாததால், தேர்ச்சி சதவீதம், 8.01 சதவீதம் சரிந்து, 87.23 ஆகியுள்ளது.ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேர்வெழுதிய, 153 மாணவியரும் தேர்ச்சி பெற்றதால், நுாறு சதவீத தேர்ச்சி. 2023ல் 90 சதவீத தேர்ச்சி பெற்றிருந்த இப்பள்ளி, 2024ல், 97.78 சதவீதத்தை எட்டி பிடித்தது.நடப்பாண்டு, முந்தைய ஆண்டை விட, 18 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினாலும், 2.22 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று, நுாறு சதவீதத்தை தொட்டது.ஒரு மாணவி தோல்விசாதிக்க முடியாத பள்ளிமடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, 2023ல், 96.61 சதவீத தேர்ச்சி பெற்றது. 2023ல், மாணவர்கள், 98.77 சதவீதமும், மாணவியர், 96.72 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி, 97.89 ஆக உயர்ந்தது. நடப்பாண்டு, 122 மாணவர்கள் தேர்வெழுதி, 122 பேரும் தேர்ச்சி பெற்றனர்; மாணவர் தேர்ச்சி சதவீதம், நுாறு. 77 மாணவியர் தேர்வெழுதி ஒருவர் தேர்ச்சி பெறாததால், மாணவியர், 98.80 சதவீதம். பள்ளி நுாறு சதவீதம் பெற இயலாமல், 99.50 சதவீதம் தேர்ச்சியை மட்டுமே பெற முடிந்தது.