போதையில் மயங்கி பலி
திருப்பூர்; ஒட்டன்சத்திரம், நானம்பட்டியைச் சேர்ந்தவர் சின்ராசு, 60. வெள்ளகோவில் அடுத்த புதுப்பையில் தங்கி கட்டட வேலைக்குச் சென்று வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அங்குள்ள மதுக்கடையில் மது அருந்தியுள்ளார்.தங்கமேடு பகுதியில் உள்ள டீக்கடை முன்புறம் மது போதையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.