உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாழடைந்த தொகுப்பு வீடுகள்: பராமரிப்பது எப்போது?

பாழடைந்த தொகுப்பு வீடுகள்: பராமரிப்பது எப்போது?

பல்லடம், ; பல்லடம் அருகே, பாழடைந்த தொகுப்பு வீடுகளை பராமரிப்பது எப்போது? என்று அதில் வசிக்கும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.தமிழகம் முழுவதும், மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கட்டப்படும் தொகுப்பு வீடுகள், பழுதான நிலையில் உள்ளன. இவற்றைப் பராமரிக்க, கடந்த மாசம் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.இதன்படி, பழுதான தொகுப்பு வீடுகள் கணக்கீடு செய்யப்பட்டு, சாய்வான கான்கிரீட் வீடுகளுக்கு, 1.50 லட்சம் ரூபாயும், ஓட்டு வீடுகளுக்கு, 70 ஆயிரம் ரூபாயும் மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஊராட்சி அளவிலான தேர்வு குழுக்கள், பழுதான தொகுப்பு வீடுகள் குறித்த பட்டியலை தேர்வு செய்தன.இதன்படி, பழுதான தொகுப்பு வீடுகள் பராமரிக்கப்படாமல் உள்ளது, கரைப்புதுார் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து கரைப்புதுார் ஏ.டி., காலனி பகுதி பொதுமக்கள் கூறியதாவது:இந்த தொகுப்பு வீடுகள், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளன. மேற்கூரையில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.பல இடங்களில் விரிசல் விட்டுள்ள நிலையில், தொடர் மழை பெய்து வருவதால், அச்சத்துடன்தான் வாழ்ந்து வருகிறோம். வீடுகள் பராமரிக்க நிதி ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டது.அதிகாரிகள் வந்து பார்த்து விட்டு செல்கிறார்களே தவிர, எங்களது குடியிருப்புகள் பட்டியலில் உள்ளதா இல்லையா என்றே தெரியவில்லை. எனவே, பழுதான குடியிருப்புகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி