உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தினமலர் லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ; வரலாற்று ஆய்வு நடுவம் வாழ்த்து

தினமலர் லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ; வரலாற்று ஆய்வு நடுவம் வாழ்த்து

உடுமலை; 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கியதற்கு, உடுமலை வரவாற்று ஆய்வு நடுவம் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளது.உடுமலை வரவாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் குமாரராஜா, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அருட்செல்வன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, பத்திரிகை துறையிலும், கல்வித்துறையிலும் ஆற்றி வரும் சேவையை அங்கீகரிக்கும் வகையில், பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.இதழியல் துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதோடு, வரலாற்றுச்சாதனைகளையும், தேசத்தின் வளர்ச்சிக்கும், மக்களுக்கான சமூக நிகழ்வுகளை மிகச்சிறப்பாகவும், கருத்துச்செறிவுள்ள வகையில், தனது இயல்பு மாறாமல், தினந்தோறும் மக்களுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் 'தினமலர்' நாளிதழின் இயக்குனர், பத்திரிகை தொடர்பான பல்வேறு அமைப்புகளில் உயர் பதவியை அலங்கரித்து, சமூகத்திற்கு சிறப்பான பங்காற்றி வருகிறார்.அதோடு கல்வி நிறுவனங்களை நிறுவி, எதிர்காலத்தில் சிறந்த தலைமுறையை உருவாக்கி வரும் 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, தேசத்தின் உயரிய விருதான, பத்ம ஸ்ரீ விருது வழங்கிய, இந்திய ஜனாதிபதி, மத்திய அரசுக்கும் நன்றியையும், விருது பெற்ற டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை