உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி மின் இணைப்புகள் நேரடி கள ஆய்வு நடத்த உத்தரவு

மாநகராட்சி மின் இணைப்புகள் நேரடி கள ஆய்வு நடத்த உத்தரவு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் மின் இணைப்புகளை, நேரடியாக கள ஆய்வு நடத்த, மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.திருப்பூர் வடக்கு தாலுகா, வெங்கமேடு மின்பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில், மாநகராட்சி கமிஷனர் பெயரில் உள்ள, கடைகளுக்கான மின் இணைப்புகளுக்கு, மாநகராட்சியே கட்டணம் செலுத்துவது கண்டறியப்பட்டது. வாடகைதாரர் செலுத்தாமல், மாநகராட்சி நிர்வாகம் மின் கட்டணம் செலுத்தும் முறைகேடு தெரியவந்தது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், திருப்பூர் கோட்ட மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டத்தில், சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் மனு கொடுத்தார்.திருப்பூர் மின் பகிர்மானவட்ட பொது பொறியாளர் விஜயேஸ்வரன் கூறுகையில், ''இப்பிரச்னை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, மாநகராட்சி பகுதிகளில் கள ஆய்வு நடத்த வேண்டும். கமிஷனர் பெயரில் உள்ள இணைப்புகள் விவரம், யார் மின் கட்டணம் செலுத்துகின்றனர் என்ற விவரம் கண்டறியப்படும். இதுதொடர்பாக, மின்வாரியம் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை