மேலும் செய்திகள்
40 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
13-Nov-2024
உடுமலை; உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில், கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விளக்க கூட்டம், அமராவதி ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் நடந்தது. உடுமலை தாலுகா செயலாளர் மாலினி தலைமை வகித்தார். தேசிய தலைவர் ஆறுமுகம், தாலுகா செயலாளர் கனகராஜ், சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன், கருப்புச்சாமி உட்பட, 200 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
13-Nov-2024