உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட தடகள போட்டி 17ல் திருப்பூரில் துவக்கம்

மாவட்ட தடகள போட்டி 17ல் திருப்பூரில் துவக்கம்

திருப்பூர் : மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் திருப்பூரில் வரும், 17ம் தேதி துவங்குகிறது. இது குறித்து, திருப்பூர் மாவட்ட தடகள சங்க தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது: தடகள சங்கம் சார்பில், வரும், ஆக., 17ம் தேதி, திருப்பூரில், 7வது திருப்பூர் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025, சிக்கண்ணா கல்லுாரி வளாகம், விளையாட்டு ஆணைய தடகள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் 14, 16, 18 மற்றும் 20 வயது பிரிவுகளில், மாணவர்கள் தடகளப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு தடகள வீரரின் ஓட்ட நேரம் மற்றும் தொலைவுகளை முற்றிலும் போட்டோ பினிஷ் முறையில் (நவீன கருவிகள் மூலம்) மிகத் துல்லியமாக அளவீடு செய்யப்படும். அவ்வகையில், தகுதி பெற்ற தடகள நடுவர்கள், 60 பேர் போட்டிகளை கண்காணிக்கின்றனர். இதில் பங்கேற்கும், அரசுப்பள்ளி மற்றும் அரசுக் கல்லுாரி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. இதில், பங்கேற்க விரும்புவோர், தடகள சங்கம் அனுப்பிய, கூகுள் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்க ஆக., 12ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 86677 99305, எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை