மேலும் செய்திகள்
டென்னிகாய்ட் போட்டி: மாணவர்கள் உற்சாகம்
16-Oct-2025
திருப்பூர்: திருப்பூரில் நடந்த மாவட்ட பீச் வாலிபால் போட்டியில், 14, 17 மற்றும், 19 வயது மூன்று பிரிவிலும், வித்யவிகாசினி பள்ளி அணி, வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றது. பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட பீச் வாலிபால் போட்டி, திருப்பூர், காங்கயம் ரோடு, வித்யவிகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. குறுமைய அளவில் முதலிடம் பெற்ற ஏழு அணிகள் பங்கேற்றன. காலிறுதி, அரையிறுதி போட்டிகளை தொடர்ந்து, இறுதி போட்டி நடந்தது. போட்டிகளை, வித்யவிகாசினி பள்ளி முதல்வர் அன்பரசு துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். வாவிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இளங்கோ, கருப்பகவுண்டம்பாளையம் உடற்கல்வி ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தனர். வித்ய விகாசினி பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பிரகாஷ், கார்த்திகேயன் ஒருங்கிணைத்தனர். இதில், 14, 19 வயது இரு பிரிவிலும் வித்யவிகாசினி பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், உடுமலை எஸ்.வி., அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவில், 2 - 0 என்ற செட் கணக்கில், அம்மாபாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி அணி, இரண்டாமிடம் பெற்றது; இப்பிரிவிலும் வித்யவிகாசினி பள்ளி முதலிடம் பெற்று, அசத்தியது. விரைவில் நடக்கவுள்ள மாநில பீச் வாலிபால் போட்டிக்கு, 14, 17 மற்றும் 19 வயது பிரிவில் இருந்து தலா மூன்று வித்ய விகாசினி பள்ளி அணிகள் தேர்வானது.
16-Oct-2025