மேலும் செய்திகள்
மாவட்ட கேரம் போட்டி :கீர்த்தனா அசத்தல்
23-Sep-2025
திருப்பூர்; பள்ளி கல்வித்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட அளவிலான கேரம் போட்டி, குமார் நகர், பிஷப் உபகாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் உள்ள ஏழு குறுமையங்களில் நடந்த குறுமைய கேரம் போட்டிகளில் வெற்றி பெற்று, மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட, 127 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். கண்காணிப்பு குழு பொறுப்பாளர் இளங்கோவன் ஒருங்கிணைத்தார். 14, 17 மற்றும் 19 வயது பிரிவுக்கான தனிநபர், குழு பிரிவில் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றோர் மாணவர் பிரிவு: 14 வயது தனிநபர், பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி; இரட்டையர் பிரிவில், கொங்கல் நகரம், அரசு மேல்நிலைப்பள்ளி; 17 வயது தனிநபர் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி; இரட்டையர் பிரிவில், வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யங்காளிபாளையம்; 19 வயது தனிநபர் பிரிவில், அரசு மேல்நிலைப்பள்ளி பெரியாயிபாளையம்; இரட்டையர், அலங்கியம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் முதலிடம் பெற்றன. மாணவியர் பிரிவு: 14 வயது தனிநபர் பிரிவில், கொங்கல் நகரம், அரசு மேல்நிலைப்பள்ளி; இரட்டையர் பிரிவில் திருப்பூர் தெற்கு முதலிடம்; 17 வயது தனிநபர், அலங்கியம் அரசு மேல்நிலைப்பள்ளி; இரட்டையர், ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி முதலிடம்; 19 வயது தனிநபர் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக், இரட்டையர் அலங்கியம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
23-Sep-2025