உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட அளவிலான ஹாக்கி; பெதப்பம்பட்டி பள்ளி வெற்றி

மாவட்ட அளவிலான ஹாக்கி; பெதப்பம்பட்டி பள்ளி வெற்றி

உடுமலை; மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டியில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான திருப்பூர் மாவட்ட அளவில் ஹாக்கிப்போட்டி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் நடந்தது. மாவட்ட அளவில், 25 அணிகள் பங்கேற்றன. அதில் பள்ளி மாணவர்களுக்கான பிரிவில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு, தலா ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இம்மாணவர்களுக்கு பள்ளித்தலைமையாசிரியர் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை