வட்டார அளவிலான ஊட்டச்சத்து மாத விழா
உடுமலை : உடுமலை வட்டார அளவில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா நடந்தது.பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு,செப்., மாதம் முழுவதும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதவிழா கொண்டாடப்படுகிறது.உடுமலை வட்டார அளவில், வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில் இவ்விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.உடுமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் (பொறுப்பு) தீபா தலைமை வகித்தார். கல்லுாரி மாணவியருக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சமைக்கும் போட்டி, ஓவியப்போட்டி, கோலப்போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவியருக்கு உடல்நலம் குறித்தும், வட்டார மருத்துவ அலுவலர்கள் விளக்கமளித்தனர்.எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.