உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வட்டார அளவிலான பேச்சு போட்டி

வட்டார அளவிலான பேச்சு போட்டி

உடுமலை; உடுமலையில் மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் நடந்தது.நடப்பு ஆண்டுக்கான, நல்லுலகை கட்டமைக்கும் கூட்டுறவு என்ற கருப்பொருள் அடிப்படையில், சர்வதேச கூட்டுறவு ஆண்டாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதையொட்டி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சு, கதைசொல்லுதல் மற்றும் கட்டுரைப்போட்டி நடந்தது.இப்போட்டிகளில், 'நான் பார்த்த கூட்டுறவு சங்கத்தின் கதை' என்ற தலைப்பில் போட்டிகள் நடந்தது. பள்ளி அளவில், முதல் மூன்று இடங்களில் இடம் பெற்ற மாணவர்களுக்கு, வட்டார அளவிலான போட்டி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர் சிவமணி போட்டிகளை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை