மாவட்ட வழங்கல் அலுவலர் விரைவில் பொறுப்பேற்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்துக்கு புதிய வழங்கல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில், பொறுப்பேற்க உள்ளார்.தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையிலான 40 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன், சென்னையில் தமிழ்நாடு பாட நுால் கழகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்; அவருக்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணிபுரியும் சரவணன், திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூர் வாணிப கழக மாவட்ட மேலாளர் பண்டரிநாதன், தர்மபுரிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராக செல்கிறார்; அவருக்கு பதில், ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால், திருப்பூருக்கு வாணிப கழக மாவட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.