மேலும் செய்திகள்
அத்துமீறும் தருணம்; கரணம் தப்பினால் மரணம்!
31-Jul-2025
உடுமலை; உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை பகுதியில், வனத்துறை சார்பில் முதலை பண்ணை அமைந்துள்ளது. சுமார், 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முதலை பண்ணையில், 80க்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுலா பயணியரை கவரும் வகையில், புல் தரை நடைபாதை, முயல், கொக்கு, மயில், இருவாச்சி பறவை, யானை, புலி, சிறுத்தை, ஒட்டக சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளின் தத்ரூபமான சிலைகள், பொம்மைகள், ஓவியங்கள், கழிவறை ,குடிநீர் வசதி போன்ற சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் ஆய்வு செய்த பின் அவர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், அமராவதி முதலைப்பண்ணை முதன்மையான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. வெளிநாடு சுற்றுலாப் பயணியர் உட்பட ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் இங்கு வருகை புரிகின்றனர். அவர்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில், புதிய சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வனத்துறை வாயிலாக, திட்டக் கருத்துரு தயார் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு, தெரிவித்தார். ஆய்வின் போது வனத்துறை அலுவலர்கள் மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலா ஆர்வலர்கள் நாகராஜ், சத்யம் பாபு, பிரசாத், நவீன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
31-Jul-2025