உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி தீக்காய சிகிச்சை: தயார் நிலையில் ஆம்புலன்ஸ்

தீபாவளி தீக்காய சிகிச்சை: தயார் நிலையில் ஆம்புலன்ஸ்

உடுமலை: தீபாவளியை முன்னிட்டு, 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருப்பூர் 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் உதயநிதி, மாவட்ட மேலாளர் மணிவண்ணன் ஆகியோர் கூறியதாவது: 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை சார்பில், தீபாவளியை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவம், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைகளுடன் இணைந்து, 108 அவசர சேவை, 24 மணி நேரமும், பொதுமக்கள் நலனுக்காக தயார் நிலையில், உஷார்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு வாய்ப்பு இருக்கக்கூடிய பகுதிகளில். ஆம்புலன்ஸ்கள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட உள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் டிரைவர்கள் தயாராக இருப்பர். அனைத்து, 108 ஆம்புலன்ஸ்களிலும் தீக்காயங்களை கையாளும் வசதி செய்யப்பட்டுள்ளது. அடர்த்தியான குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட சாலைகளில், குறுகிய பாதைகளில் துரிதமாக செயல்பட அவசர கால, 108 பைக் ஆம்புலன்ஸ்களும் உள்ளது. மருத்துவ உதவிக்கான அழைப்பு கேட்ட, ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சம்பந்தப்பட்ட இடத்துக்கு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார். திருப்பூரில் கருவம்பாளையம், அலகுமலை, அவிநாசி ரோடு (பை பாஸ் சந்திப்பு) தாராபுரம் ஹவுசிங் யூனிட், பல்லடம் பஸ் ஸ்டாண்ட், சென்னிமலை ரோடு, எடக்கல்பாடி (மூலனுார்), உடுமலை மார்க்கெட், உடுமலை அரசு மருத்துவமனை வட்டாரம், திருப்பதி கோவில் அருகே (ஜல்லிபட்டி) ஆகிய பத்து இடங்கள் முன்னெச்சரிக்கைக்கான ஹாட் ஸ்பாட்களாக கண்டறிப்பட்டு, 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை