ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்
உடுமலை: உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில், தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம் குறித்தும், பாதுகாப்பாக பண்டிகையை கொண்டாடுவது குறித்தும், மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்கள் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய உடை அணிந்து வந்தனர்.தொடர்ந்து தீயணைப்புத்துறை அலுவலர்கள், தீ விபத்தை தவிர்க்கும் முறை, எதிர்பாராத தீ விபத்தின் போது தீயணைப்பு கருவிகள் வாயிலாக, நெருப்பை அணைப்பது உள்ளிட்டவை குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.இனிப்பு மேளா, லட்சுமி பூஜை, பொம்மலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன.பள்ளி முதல்வர் மாலா, மாணவர்கள் பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடுவதற்கு அறிவுறுத்தினார். ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவன தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.