மேலும் செய்திகள்
குப்பை கழிவுகள் சேகரிக்க கூடுதல் பணியாளர்கள்
03-Oct-2025
உடுமலை: உடுமலை நகராட்சியில் தீபாவளி பண்டிகை காரணமாக, பட்டாசு, அட்டை பெட்டி என ஆறு டன் கழிவுகள் கூடுதலாக அகற்றப்பட்டுள்ளது. உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி சார்பில் வீடுகள் தோறும் கழிவுகள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு, 21.36 டன் கழிவுகள் சேகரமாகி வருகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் காரணமாக, ரோடுகள், வீதிகளில் பட்டாசு கழிவுகள் அதிகளவு தேங்கியுள்ளது. மேலும், வணிக நிறுவனங்கள், வீடுகளிலிருந்து அட்டை பெட்டிகள் , பிளாஸ்டிக் என திடக்கழிகள் அதிகளவு வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், துாய்மை பணியாளர்கள் கூடுதல் பணியாக, ரோடுகள், தெருக்கள் துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் காரணமாக, வழக்கத்தை விட நேற்று, கூடுதலாக ஆறு டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. நேற்று, 27 டன் கழிவுகள் வரை அகற்றப்பட்ட நிலையில், இன்றும் பட்டாசு கழிவுகள் அகற்றும் பணி நடக்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
03-Oct-2025