உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி; ஊத்துக்குளி வெண்ணெய் விற்பனை ஜோர்

தீபாவளி; ஊத்துக்குளி வெண்ணெய் விற்பனை ஜோர்

திருப்பூர்:ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைந்ததால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஊத்துக்குளியில் வெண்ணெய் மற்றும் நெய் விற்பனை அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில், கால்நடை வளர்ப்பு அதிகம். அங்குள்ள சீதோஷ்ண நிலையால், எருமை வெண்ணெய் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளது. தினமும், மூன்று டன் வரை, வெண்ணெய் உற்பத்தியும், ஒரு டன் வரை நெய் உற்பத்தியும் நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், கன்டெய்னர் வேன், பஸ், லாரி, ரயில் மற்றும் கூரியர் மூலம் வெண்ணெய் அனுப்பி வைக்கப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, இனிப்பு தயாரிப்பாளர்கள் சிறப்பு விற்பனைக்கு தயாராகிவிட்டனர். அதற்காக, ஊத்துக்குளியில் வெண்ணெய் மற்றும் நெய் வாங்க ஆர்டர் கொடுப்பது அதிகரித்துள்ளது. வெண்ணெய் மற்றும் நெய்க்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதமாக இருந்தது, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வெண்ணெய் மற்றும் நெய் விலை 5 சதவீதம் வரை, வாடிக்கையாளருக்கு குறைத்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, வெண்ணெய் கிலோ 540 ரூபாய்க்கும், நெய் கிலோ 750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !