உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க., கூட்டணியினர் இன்று ஆர்ப்பாட்டம் 

தி.மு.க., கூட்டணியினர் இன்று ஆர்ப்பாட்டம் 

திருப்பூர்; அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு விவகாரத்தில், தி.மு.க., கூட்டணி சார்பில் இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சமீபத்தில், அமெரிக்க அதிபர், இந்தியா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, 50 சதவீதம் வரி விதித்து அறிவித்தார். இதனால், அமெரிக்காவுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் ஜவுளி தொழில் துறை பெரும் பாதிப்பையும், இழப்பையும் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தவரி விதிப்பு குறித்த அறிவிப்பால் பாதிக்கப்படும் தொழிற்துறையினரை பாதுகாக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை என்று கூறி, தி.மு.க., கூட்டணி சார்பில், இன்று திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக வந்து பங்கேற்குமாறு, திருப்பூர் மாவட்ட தி.மு.க., செயலாளர்கள் சாமிநாதன் (கிழக்கு மாவட்டம்), செல்வராஜ் (மத்திய மாவட்டம்), பத்மநாபன் (தெற்கு மாவட்டம்) ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி