மேலும் செய்திகள்
அவிநாசி அ.தி.மு.க., நிர்வாகிகள் நியமனம்
19-Jan-2025
அவிநாசி : மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து அவிநாசி மேற்கு ரத வீதியில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது.திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். அவிநாசி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ் வரவேற்றார்.மாநில மருத்துவர்அணி இணை செயலாளர் கோகுல் கிருபாசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, திருமுருகன்பூண்டி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, சேவூர் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், அவிநாசி நகர செயலாளர் வசந்த் குமார், திருமுருகன்பூண்டி நகர செயலாளர் கிருஷ்ணசாமி, அவிநாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் கயல்விழி, மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி, தலைமைப் பேச்சாளர் பவானி கண்ணன் ஆகியோர் பேசினர்.மாவட்ட இலக்கிய அணி தலைவர் ராயப்பா நன்றி கூறினார்.
19-Jan-2025