வாசகர்கள் கருத்துகள் ( 2 )
என்னா வா இருந்தா என்ன ஆட்டய போ ட்டா சரி.
கொள்ளைத் ஸாரி கொள்கைத் திலகமே வருக வருக.
திருப்பூர்: பல்லடம் நகர தி.மு.க. சார்பில், அமைச்சர் சாமிநாதனுக்கு நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் சாமிநாதன், தி.மு.க.வில் இளைஞர் அணி செயலாளராக இருந்தார். பின், காங்கயம், தாராபுரம் தொகுதிகள் அடங்கிய கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், தி.மு.க. துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின், நேற்று அமைச்சர் சாமிநாதன் பல்லடத்துக்கு வந்த போது, நகர தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில், மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் வரவேற்பு அளிக்க குவிந்தனர். நால் ரோடு சிக்னல் அருகே வாணவேடிக்கை, கலைஞர்களின் நடனம் ஆகியவற்றுக்கு இடையே வரவேற்பு அளித்தனர். சால்வை மற்றும் மாலை அணிவித்து கட்சியினர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
என்னா வா இருந்தா என்ன ஆட்டய போ ட்டா சரி.
கொள்ளைத் ஸாரி கொள்கைத் திலகமே வருக வருக.