உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திருப்பூர்; தமிழக கவர்னரைக் கண்டித்து தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், குமரன் சிலை முன் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ் முன்னிலை வகித்தனர்.இளைஞர் அணி செயலாளர் தங்கராஜ், மாணவர் அணி செயலாளர் திலகராஜ் உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் பங்கேற்றனர். கவர்னரைக் கண்டித்தும், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., நிர்வாகிகளைக் கண்டித்தும், பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.l திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் தாராபுரம் அண்ணாதுரை சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகானந்தம், நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், ஒன்றிய செயலாளர்செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ