உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உரிய காலத்தில் கடமையாற்றுங்கள்

உரிய காலத்தில் கடமையாற்றுங்கள்

திருப்பூர்; திருப்பூர், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவியருக்கு அறிமுகப்பயிற்சி நேற்று நடந்தது. வேதியியல் துறைத்தலைவர் நளினி வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் தலைமை வகித்தார். 'கனவு மெய்யப்பட வேண்டும்' எனும் தலைப்பில் வக்கீல் ஸ்ரீ ராதா பேசுகையில்,'உங்கள் கனவுகள் மேம்பட உரிய காலத்தில் கடமையாற்றுங்கள்; பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதுடன், சட்டரீதியான உதவிகளையும் அறிந்து கொள்ளுங்கள்,' என்றார்.படிப்பு முடித்த பின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி குறித்த விபரங்களை கல்லுாரியின் வேலை வாய்ப்பு அலுவலர் தேவி விளக்கினார். இக்கல்லுாரியில் படித்து, தற்போது வேதியியல் துறை உதவி பேராசிரியராக உள்ள அன்னபூரணி அனுபவங்களை பகிர்ந்தார். கல்லுாரியின் இணைப்பாடத்திட்டம், பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள் குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது. கணிதத்துறைத் தலைவர் மனோன்மணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ