மருத்துவர்கள் தினம் பள்ளிகளில் கொண்டாட்டம்
உடுமலை; உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவர்கள் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மாணவர்கள், உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள மருத்துவர்களை சந்தித்து, அவர்களுக்கு புகைப்பட சட்டகம் மற்றும் மலர் அளித்து மரியாதை செய்தனர்.மருத்துவர்கள், மாணவர்களின் அன்பளிப்பை ஏற்றுக்கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தினர். தொடர்ந்து மருத்துவ பராமரிப்பு உபகரணங்களை, மாணவர்களுக்கு காண்பித்து விளக்கமளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.* கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. இப்பள்ளி மாணவர்கள் உடுமலையில் உள்ள பல்வேறு மருத்துவமனை மருத்துவர்களை சந்தித்து அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மரியாதை செய்தனர். தொடர்ந்து மருத்துவமனை செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.