உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்டே கம்பி மீது துணி உலர்த்த வேண்டாம்! மின்வாரிய அதிகாரி அறிவுரை

ஸ்டே கம்பி மீது துணி உலர்த்த வேண்டாம்! மின்வாரிய அதிகாரி அறிவுரை

- நமது நிருபர் -தேசிய மின்சார பாதுகாப்பு தினத்தையொட்டி, தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. கடந்த மாதம் 26ம் துவங்கி, கடந்த 2ம் தேதி வரை, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. குறிப்பாக, பொதுமக்கள் மின்விபத்து ஏற்படாமல் தவிர்க்க, தகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்ட மின் ஆய்வாளர் சீனிவாசன் கூறியிருப்பதாவது: ஐ.எஸ்.ஐ., முத்திரையுள்ள, தரமான ஒயர்கள் மற்றும் மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்சார 'பிளக்' பொருத்துவதற்கு முன்பாகவும், எடுப்பதற்கு முன்பாகவும், 'சுவிட்ச் ஆப்' செய்ய வேண்டும்.பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய மூன்று 'பின் சாக்கெட்' உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.மேலும், 4.30 மில்லி ஆம்ப்ஸ் - ஆர்.சி.சி.பி., அல்லது ஆர்.சி.பி.ஓ., (RCBO) மின் கசிவு தடுப்பானை இல்லங்களில் உள்ள 'மெயின் சுவிட்ச் போர்டில்' பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்தை தவிர்க்கலாம்.உடைந்த சுவிட்ச்களை மாற்றிவிடுங்கள்; பழுது நீக்காமல் உபயோகம் செய்யக்கூடாது. கேபிள் 'டிவி' ஒயர்களை மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான 'எர்த்' நில இணைப்பு செய்து, பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.'சுவிட்ச்'சுகள், இ-பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளுங்கள்.மின் கம்பத்தின் 'ஸ்டே' கம்பி மீது, கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை செய்தல் கூடாது. குளியலறை, கழிப்பறையில் ஈரமான இடங்களிலும் சுவிட்ச் பொருத்தக்கூடாது. 'எக்ஸ்டன்சன்' நல்ல நிலையில் இருந்தால் மட்டும் உபயோகிக்க வேண்டும்.மழைக்காலங்களில், டிரான்ஸ்பார்மர், மின்கம்பம், மின்பகிர்மான பொட்டிகளிடம் செல்லக்கூடாது. மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லாதீர்கள். உடனே அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும்.மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுகலாம். அவசர நேரங்களில் மின் இணைப்பினை துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் 'சுவிட்ச்'களின் இருப்பிடம் அமைய வேண்டும்.தற்காலிக ஒயரிங் செய்து பயன்படுத்தும் போதுதான், அதிக விபத்து நேர்கிறது; தேவையில்லாத சுவிட்ச் போர்டு மற்றும் ஒயர்களையும் நீக்கிவிட வேண்டும். மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்தி, மின்விபத்து இல்லாது மாவட்டமாக தொடர வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி