ஒன்றிய அளவில் மருத்துவ முகாம் மாற்றுத்திறனாளிகளே மறந்துடாதீங்க!
திருப்பூர், : திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், ஒன்றிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், வரும் 21 ல் துவங்கி 10 ம் தேதி வரை நடைபெற உள்ளது.வரும், 21ம் தேதி, தாராபுரம் ஐந்து முக்கு ரோட்டிலுள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 22ம் தேதி, திருப்பூர் அரண்மனைப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 23ம் தேதி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 24ம் தேதி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, 27ம் தேதி, பல்லடத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 28ம் தேதி மூலனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடக்கிறது.பொங்கலுார் ஒன்றியத்தில், வரும், 29ம் தேதி பி.யு.வி.என்., தொடக்கப்பள்ளி, 31ம் தேதி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, பிப்., 4ம் தேதி, காங்கயம் வட்டார வளமையம், 5ம் தேதி உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 6ம் தேதி குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி, 7ம் தேதி வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு, பிப்., 10ம் தேதி, தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் முகாம் நடைபெற உள்ளது.இம்முகாமில், கண், காது மூக்கு தொண்டை, மனநலம், நரம்பியல், எலும்புமுறிவு மருதுவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகளை பரிசோதிப்பர். மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், முகாமி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். பத்து வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, நலவாரிய பதிவு, தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டுக்கான பதிவு மற்றும் பல்வேறு நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.மாற்றுத்திறனாளிகள், ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் ஒரிஜினல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவு போட்டோ - 4 ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒன்றிய அளவில் முகாம் நடத்தப்பட உள்ளதால், கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டுவரும் மாவட்ட அளவிலான மருத்துவ முகாம், வரும், 21ம் தேதி முதல் பிப்., 10ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.