உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளாஸ்டிக் பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம்

பிளாஸ்டிக் பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம்

திருப்பூர்;'போகி பண்டிகை நாளில் டயர், பிளாஸ்டிக் பொருட்களை தீயிட்டு எரிக்காதீர்'' என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில்அறிவுறுத்தப்பட்டது.திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 'புகையில்லா போகி' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பல்லடம் பஸ் ஸ்டாண்டில் நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஒருங்கிணைத்தார்.மாசுகட்டுப்பாட்டு வாரிய தெற்கு உதவி பொறியாளர் செந்தில்குமார், 'போகியன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்காதீர். செயற்கையான பொருட்களை எரிப்பதால், நச்சுப் புகைமூட்டம் உருவாகி, சுவாச நோய், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், பிளாஸ்டிக்கை எரிப்பதை தவிர்த்து போகி பண்டிகை கொண்டாடுங்கள்,' என்றார்.என்.எஸ்.எஸ்., அலகு 2 மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, சிரஞ்சீவி, மதுகார்த்திக், நவீன்குமார் இணைந்து விழிப்புணர்வு நாடகம் நடித்து காண்பித்தனர். விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை