மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
07-Dec-2024
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
10-Nov-2024
திருப்பூர்; திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில், 18ம் ஆண்டு 'இசை அமுதம் -2024' நிகழ்ச்சி, இன்று துவங்குகிறது.ஷண்முகானந்த சங்கீதா சபா சார்பில், 18ம் ஆண்டு இசை அமுதம் 2024' இன்னிசை நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில், இன்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது.மாலை, 6:30 மணிக்கு, சென்னை கோமல் தியேட்டர் குழுவினரின், 'திரவுபதி' மேடை நாடகம் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:30 மணிக்கு, எம்.எஸ்., சுப்புலட்சுமி விருது பெற்ற, திருச்சூர் அனுரூப் மற்றும் கங்கா சசிதரன் குழுவினரின், வயலின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இவர்களுடன், முத்துக்குளம் ஸ்ரீராக் - மிருதங்கம், திருப்புனித்துரா ஸ்ரீகுமார் தவில், மாஞ்சூர் உன்னிகிருஷ்ணன் கடம் இசையும் இடம்பெறுகிறது.திருப்பூர் மக்கள் 'இசை அமுதம்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, ஷண்முகானந்த சங்கீத சபா அழைப்பு விடுத்துள்ளது.
07-Dec-2024
10-Nov-2024