உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம்

3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம்

திருப்பூர்: கோடை காலம் துவங்கிய நிலையில், மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோடை காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். கமிஷனர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். தலைமை பொறியாளர் (பொறுப்பு) செல்வநாயகம், துணை கமிஷனர் சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளிலும், கோடை காலத்தில் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வினியோகத்தை அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும். லீக்கேஜ் உள்ளிட்டவைகள் இருந்தால், உடனக்குடன் சரி செய்ய வேண்டும். குறைந்த பட்சம், மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். குடிநீர் பிரச்னை தொடர்பான புகார்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள், அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வினியோகம் தொடர்பாக பிரச்னை உள்ள பகுதிகள் குறித்து கேட்டறிந்து, அதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை