சொட்டு நீர் பராமரிப்பு கருத்தரங்கு
உடுமலை, ; உடுமலை வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில், கிளுவங்காட்டூர் கிராமத்தில், ' சொட்டு நீர் பாசன அமைப்பு மற்றும் தானியங்கி பராமரிப்பு' குறித்த கருத்தரங்கம் நடந்தது.வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமாஷாலினி வேளாண்துறையின் மானிய திட்டங்கள் குறித்து பேசினார். உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் கிருஷ்ணன், சொட்டு நீர் பாசன கட்டமைப்பு பராமரிப்பு குறித்து விளக்கமளித்தார்.உதவி பொறியாளர் கோபிநாத், இ-வாடகை மொபைல் செயலி பயன்பாடு, தட்டு வெட்டும் இயந்திரம், பவர் டில்லர், பவர் வீடர், தானியங்கி மோட்டார் மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்து பேசினார்.உழவன் மொபைல் செயலி பயன்பாடு குறித்து உதவி தொழில்நுட்ப மேலாளர் மனோஜ்குமார் பேசினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிமலர் நன்றி தெரிவித்தார்.கிளுவங்காட்டூர் மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.