பெண் கொலை டிரைவர் கைது
திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு, பலவஞ்சிபாளையத்தை வீட்டுக்குள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்தனர். அதில், இறந்த பெண் மது, 35 என்பதும், அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரம் வசித்து வந்ததும் தெரிந்தது. அவருக்கு, செப்டிக் டேங் லாரி டிரைவர் இளங்கோ, 40 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த, நான்கு மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். மதுவுக்கு, வேறு ஒருவருடன் பழக்கம் இருப்பது குறித்து அறிந்து இளங்கோ கேட்டார். அதில், தகராறு ஏற்பட்டு கல்லால் முகத்தில் அடித்து மதுவை கொலை செய்தார். வீரபாண்டி போலீசார் இளங்கோவை கைது செய்தனர்.