உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வட்டமலைக்கரையில் வறட்சி தாண்டவம்

வட்டமலைக்கரையில் வறட்சி தாண்டவம்

திருப்பூர், ; வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை ஓடை அணை, 1978ம் ஆண்டு கட்டப்பட்டது; கால்வாய் வழியாக, 6,000 ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. அணைக்கு, கள்ளிப்பாளையம் பி.ஏ.பி., கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. போதிய நீர்வரத்து இல்லாததால், பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது.வட்டமலைக்கரை அணைக்கு ஆண்டுக்கு மூன்று முறை தண்ணீர் கொடுக்க வேண்டும்; ஒன்றரை ஆண்டுக்குள் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டம் பரிசீலனையில் இருந்து வருகிறது; 2021ல், பரம்பிக்குளம் - ஆழியாறு கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் விடப்பட்டது.பி.ஏ.பி., கிளை வாய்க்காலில் இருந்து, வட்ட மலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும்; அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் நிரந்தரமான திட்டத்தையும் உருவாக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், வட்ட மலைக்கரை ஓடை அணை விவசாயிகள், அணைக்கு நிரந்தரமான தண்ணீர் வசதியை ஏற்படுத்தக்கோரி, விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் நேற்று, தனித்தனியே மனு வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை