உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வறட்சியை தாங்கி வளரும் வெட்டிவேர்

வறட்சியை தாங்கி வளரும் வெட்டிவேர்

திருப்பூர்:தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: மண் வளத்தை பாதுகாப்பதில், வெட்டி வேர் புல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தாவரம், வறட்சியையும் தாங்கி வளரக்கூடியதாகும். தீப்பிடித்தால் கூட மீண்டும் தழையும் தன்மையுடையது. அனைத்து பயிர்களுடன், சமவெளி மற்றும் மலைப்பாங்கான பகுதியிலும் இப்புல் வளரும். சூரிய ஒளியை அறுவடை செய்து, அருகிலுள்ள பயிர்களுக்கும் பலன் அளிக்கும். தென்னந்தோப்புகளில், இப்புல் வகையை வளர்த்தால், நீர் பிடிப்பு திறனை அதிகரித்து, மண்ணில் நீண்ட நாள் ஈரம் காக்க உதவும். சரிவான பகுதிகளில் சாகுபடி செய்தால், தண்ணீர் அரிப்பு மற்றும் மண் அரிப்பு சேதம் வராமல் தடுக்கலாம். இதை விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை