உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதை பொருட்கள் ஒழிப்பு: அரசு பள்ளியில் விழிப்புணர்வு

போதை பொருட்கள் ஒழிப்பு: அரசு பள்ளியில் விழிப்புணர்வு

திருப்பூர்: போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது. முகாமில், சட்டப்பணிகள் ஆணைக்குழு, வக்கீல் மணிகண்டன், மூத்த வக்கீல்கள் கிரி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் சந்தோஷ், விழுதுகள் அறக்கட்டளை திட்ட மேலாளர் சந்திரா ஆகியோர் பேசினர். சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. போதை பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து கூறப்பட்டது. முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கர்னல் வரவேற்றார். உதவி தலைமையாசிரியர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் சிராஜூதீன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ