உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முருங்கை சீசன் துவங்கியது

முருங்கை சீசன் துவங்கியது

பொங்கலுார்; முருங்கை, வறட்சிக்காலத்தில் அதிகமாக காய்க்கும்.கார்த்திகை மாதம் முதல் போதிய மழையின்றி வறட்சி நிலவுவதால் முருங்கை மரங்கள் நன்றாக பூத்து குலுங்குகின்றன. சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது.இதனால் விலையும் சரியத் துவங்கி உள்ளது உயர் ரக முருங்கை சராசரியாக கிலோ, 20 ரூபாய்க்கும், மர முருங்கை கிலோ, 13 ரூபாய்க்கும் விலை போகிறது. ஆடி மாதம் முருங்கை சீசன் காலமாகும்.இன்னும் சில நாட்களில் ஆடி மாதம் துவங்க உள்ளது. முருங்கை வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் விலை வீழ்ச்சியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.முருங்கை விவசாயிகள் சிலர் கூறுகையில், ''வட மாநிலங்களில் பருவமழை சீசன் என்பதால் முருங்கை விளைச்சல் சரியும்.ஆடி மாதத்தில் விலை குறைந்தாலும் ஆவணி மாதத்தில் இருந்து விலை அதிகரிக்கும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை