உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இ - சேவை மையங்கள் செயல்பாடு கேள்விக்குறி

இ - சேவை மையங்கள் செயல்பாடு கேள்விக்குறி

பல்லடம், ;''கூட்டுறவு சொசைட்டிகளில் உள்ள இ - சேவை மையங்கள் சரிவர செயல்படுவதில்லை'' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம் சுட்டியுள்ளது.இதன் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், 'விவசாயிகள், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இ - சேவை மையங்கள் துவங்கப்பட்டன. விவசாயிகளின் பயன்பாடு கருதி கூட்டுறவு சொசைட்டிகளிலும் இ - சேவை மையங்கள் கொண்டுவரப்பட்டன. இதன் மூலம், பட்டா மாறுதல், சிட்டா, உதவித்தொகை விண்ணப்பம், ஜாதிச் சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் பெற்று பயன்பெற முடியும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சொசைட்டிகளிலும், இ - சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கூட்டுறவு சொசைட்டிகளில் உள்ள இ - சேவை மையங்கள் செயல்படுவதில்லை என்ற சந்தேகம் உள்ளது. கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !