ஹிந்து முன்னணி மாணவர்களுக்கு கல்வியுதவி
திருப்பூர்; ஹிந்து முன்னணி திருப்பூர், முத்தணம்பாளையம் நகரம் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். மாணவ, மாணவியர் 74 பேருக்கு சீருடை மற்றும் புத்தகப் பை; 21 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், 2.10 லட்சம் ரூபாய் உதவித்தொகை என, மொத்தம் 2.60 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.பாரதிய மஸ்துார் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், செயல் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.