உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

திருப்பூர்; மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்தாண்டு பெதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவியருக்கு, 50 ஆயிரம் ரூபாய்ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. சுதந்திர தினவிழாவில், பள்ளியின் முன்னாள் மாணவர் பேரவை சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. குறிப்பாக, பள்ளிக்கு பெருமை சேர்த்த, கிஷ்வர் ஜஹானுக்கு, ரொக்கப்பரிசாக, 12 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் செல்வக்குமார் (பொறுப்பு), பள்ளி வளர்ச்சிக்குழு, முன்னாள் மாணவர் பேரவை, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ