உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்வி உதவித்தொகை வழங்கியது டிசெட்

கல்வி உதவித்தொகை வழங்கியது டிசெட்

திருப்பூர்; திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டிசெட்), பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற, மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. முப்பதாம் ஆண்டுக்கான நிகழ்ச்சி, சிறுபூலுவப்பட்டி 'டிசெட்' அலுவலகத்தில் நடந்தது.இதன் தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் மயில்சாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ராம்ராஜ் காட்டன் சேர்மன் நாகராஜன் பங்கேற்று, பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி, பாராட்டு தெரிவித்தார். மாநில அளவில் முதலிடம் பெற்ற, பல்லடம், கண்ணம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் ராகுலுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மாவட்டத்தின், 31 பள்ளிகளைச் சேர்ந்த, 35 மாணவ, மாணவியருக்கு, மொத்தம், 1.13 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. பொருளாளர் பொன்னுசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை