தேர்தல் பார்வையாளர் ஆய்வு
எல்.ஆர்.ஜி. கல்லுாரி வாக்கு எண்ணிக்கை மையத்தில், நேற்று காலை தெற்கு தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் தர்மேந்திர சிங், தேர்தல் நடத்தும் அலுவலர் அமித் ஆகியோர், எல்.ஆர்.ஜி. கல்லுாரிக்கு சென்று பார்வையிட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் அளித்த படிவங்கள் சரி பார்க்கப்பட்டன. வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய படிவங்கள் குறித்த விவரங்களை தேர்தல் அலுவலர்கள் விளக்கினர். இதில், வேட்பாளர்கள் மற்றும் ஏஜன்ட்கள் பங்கேற்றனர்.