உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவர் சந்தை ரோட்டில் ஆக்கிரமிப்பு

உழவர் சந்தை ரோட்டில் ஆக்கிரமிப்பு

உடுமலை; உடுமலை உழவர் சந்தை ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.உடுமலை உழவர் சந்தைக்கு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.உழவர் சந்தை இயங்கும் நேரத்தில் ரோட்டில், காய்கறிகள் விற்பனை செய்ய தடை உள்ள நிலையில், இந்த ரோட்டில் இரு புறமும் ஏராளமான காய்கறி கடைகள் அமைக்கப்படுகிறது.அதிலும், உழவர் சந்தை வழித்தடம் மற்றும் நுகர்வோர் வாகனம் நிறுத்தும் பகுதியை ஆக்கிரமித்து, ஏராளமான கடைகள் அமைக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.மேலும், விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை விற்க முடியாமல், கடுமையாக பாதித்து வருகின்றனர். எனவே, உழவர் சந்தை ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை