பொறியியல் மாணவர்கள் விசிட்
திருப்பூர்; அண்ணா பல்கலைக் கழகம் கிண்டி பொறியியல் கல்லுாரி செராமிக் டெக்னாலஜி மாணவர்கள் 60 பேர் மற்றும் ஆசிரியர் குழுவினர் நேற்றுமுன்தினம் திருப்பூர் வந்தனர். தொழில் நிறுவனங்களை பார்வையிட்ட அம்மாணவர்கள், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.திருப்பூரில் பனியன் தொழில் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள், தேவைகள், வேலைவாய்ப்பு குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் பேசினர். நீர் மேலாண்மை, காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்து காட்சிப்படுத்தப்பட்டது.பிரதமரின் வேலை ஊக்குவிப்பு திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம், பிரதமரின் உணவுப்பொருள் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.